ஒலிவ மரம் ஒரு கண்ணோட்டம் – ராஜஸ்தானில் எப்படி வந்தது?

ஒலிவ மரம் ஒரு கண்ணோட்டம் – ராஜஸ்தான் மாநிலத்தில் எப்படி வந்தது?

ஒலிவ மரம் olive tree

ஒலிவ மரம்

              ஓலியா யூரோபியா (Olea europaea) என்ற தாவர பெயரைக்கொண்ட ஒலிவமரம் இஸ்ரவேலிலும் பிற வளைகுடா மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் இயற்கையாகவே காணப்படுகிறது. இதன் தமிழ் பெயர் “சைத்தூன்” என்பதாகும். இது மத்தியத்தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மரம். இதன் தாயகம் கிரேக்க நாடு ஆகும். இது வெப்ப மண்டல பிரதேசமாகிய ஆப்பிரிக்காவிலிருந்து எகிப்தின் வழியாக இஸ்ரவேல் நாட்டில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உயரம் 8-15 மீட்டர் அளவு வளரும். சைத்தூன் என்கிற சொல் உருது மொழியிலிருந்து பெறப்பட்டது.

             இலைகள் 4-10 cm நீளமும் 1-3 cm அகலமும் வளரும். அதன் பட்டை முறுங்கி வளரும். பழம் 1-2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளதும் ஆகும். “சைத்தூன்”  இளம் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாகவும் இருக்கும்.

            இது வருடம் முழுவதும் இலை உதிர்ந்தாலும் எப்போதும் பசுமையாக காணப்படும். நீண்டகாலம் நின்று பயன்தரக்கூடிய இம்மரம்  500-1000 வருடங்களுக்கு மேலாக நின்று வளரக்கூடியது. ஒலிவமரம் மிகவும் மெதுவாக வளரும் தன்மையைக் கொண்டது. இதன் கிளைகளும், இலைகளும் தழைத்து வளர்ந்து மேல்பாகத்தில் கடும்பச்சை நிறமாகவும், அடிப்பாகத்தில் வெள்ளை கலந்த பச்சை நிறமாக மினுமினுப்பாகவும் காணப்படும். இது கனிகொடுப்பதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்படுகிறது. முதிர்ந்த வயதுடைய தடியின் பட்டையில் வெடிப்புகள் காணப்படும். ஏறக்குறைய ஆயிரம் வருடமாக வளர்ந்து கனிகொடுக்கும் ஒலிவமரங்களை இஸ்ரவேல் நாட்டில் இன்றும் காணலாம்.

         ஒலிவ மரத்தின் காய்கள் பழுத்து கறுப்பு நிறமாகும்போது அவைகளை சேகரித்து செக்கில் போட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கப்படுகிறது. மேல்தோடில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் சிறந்த முதல்தர எண்ணெய் ஆகும். முற்காலங்களில் விளக்குகள் எரியவைத்து நிரந்தரமாக ஒளி கொடுப்பதற்காக இஸ்ரவேல் மக்கள் தெளிந்த எண்ணெயை உபயோகித்தனர். ஒரு முதிர்ந்த மரத்தில் இருந்து வருடத்திற்கு அரை டன் (500 கிலோ) எண்ணெய் எடுக்கக் கூடிய தரமான பழுத்த காய்கள் கிடைக்கும். யூதர்கள் ஒலிவ எண்ணெயை குறிப்பாக சமையல் எண்ணெயாகவும், மருந்தாகவும் உபயோகித்து வருகிறார்கள். ஆலிவ் என்னும் சொல்லை அடிப்படையாக கொண்டு அமைந்ததுதான் “ஒலிம்பிக்” என்னும் சொல். ஒலிவ மரம் சமாதானத்தின் சின்னம் மற்றும் நட்பின் அடையாளமாகும். ஐக்கிய நாட்டு சபையின் சின்னத்தில் ஒலிவமரக்கிளைகள் இடம்பெற்றுள்ளன.

ஒலிம்பிக்கில் ஒலிவ மரம்

                பண்டைய காலங்களில் ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெறுவோருக்கு ஒலிவ மரத்தின் இலைகளால் பின்னப்பட்ட கிரீடம் சூட்டுவது வழக்கம். இது அம்மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. காட்டொலிவ மரத்தில் இருந்து நல்ல ஒலிவ மரத்தை உருவாக்குவதற்காக, அவற்றின் கிளைகளை வெட்டி பதியன் வைக்கும் பழக்கத்தை இன்றும் காணலாம். நல்ல ஒலிவமரம் உருவாக்க பழங்காலத்தில் இருந்து ஒட்டவைப்பு செய்து வந்ததாக தெரிகிறது. ஒலிவ மரத்தை நன்றாக பராமரிக்காவிட்டால் அவைகளின் மகசூல் குறைந்து பயன் அற்றதாகி நாளடைவில் ஆரோக்கியம் குன்றி காட்டொலிவமரமாக மாறிவிடும் என்ற கருத்தும் உண்டு. மேலும், பறவைகள் வெளியாக்கும் கழிவுகளிலிருந்து முளைத்துவரும் விதைகள் காட்டொலிவ மரமாக மாறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. மனித கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் மிகவும் முக்கிய இடம் வகிக்கும் மரங்களில் ஒன்று ஒலிவமரம் ஆகும். விவிலியத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளது. முற்காலங்களில் இஸ்ரவேல் நாட்டின் இராஜாக்களை அபிஷேகம் பண்ணுவதற்கு அபிஷேக தைலமாக ஆசாரியர்கள் இந்த ஒலிவ எண்ணெயை பயன்படுத்தினார்கள்.

             உணவு பொருட்களை பத்திரப்படுத்தும் தன்மை இந்த மரத்திலிருந்து கிடைக்கின்ற பழங்களுக்கு உண்டு. இதன் பழங்களை ஆரோக்கியத்திற்காகவும்  மருந்திற்காகவும் பயன்படுத்தலாம். ஒலிவ மரத்தின் தடியும் அதன் காய்களும் எண்ணெயும் வணிக ரீதியில் முக்கிய பங்காற்றி அன்னிய செலவாணியை கொடுக்கிறது.  

            ஒலிவ மரம் பயிரிடுதல் 2007-2008 இல் இந்திய-இஸ்ரேல் கூட்டு முயற்சியாக தோட்டக்கலை துறையினரால் ராஜஸ்தான் மாநிலத்தில் தகுந்த பாலைவன பகுதிகளை தேர்ந்தெடுத்து இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் அறிவுரையால் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கனி 2011-2012இல் கிடைக்கப்பெற்றது. ராஜஸ்தானில் தார் பாலைவனத்தில பயிரிடப்பட்ட ஒலிவ மரத்திலிருந்து கிடைக்கின்ற எண்ணெயின் அடக்கம் 9-14%  ஆகும். அதேசமயம் ஒலிவம் விளையும் மற்ற நாடுகளிலிருந்து கிடைக்கின்ற எண்ணெயின் அடக்கம் 12-16% ஆகும். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தகுந்த பாலைவன பிரதேசங்களில் ஆங்காங்கே பரிசோதனைக்காக 182 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடபட்டு 14000 மெட்ரிக் டண் எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பார்னியா ஒலிவ், கொராட்டினா ஒலிவ்,  பிராண்டியோ ஒலிவ், கொரோணைக்கி ஒலிவ், பிச்சோலின் ஒலிவ் மற்றும் பிக்குவல் ஒலிவ் பயிரிட்டு இதில் இரண்டு வகைகள் சிறந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயர் ரகங்களை பயிரிடும் முயற்ச்சியில் ராஜஸ்தான் மாநிலம் வெற்றியடைந்துள்ளது என்பதை பெருமையுடன் பாராட்டி மேலும் இந்த ஒலிவம் பயிரிடும் நிலத்தின் பரப்பளவு விரிந்து தன்னிறைவு பெற்று பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியைப் பெருக்கி பயனடைய வாய்ப்புக்கள் ஏராளமாக உண்டு.

Dr. Samraj

டாக்டர்.  பா. சாம்ராஜ்

முன்னாள் தலைமை வனவியல் விஞ்ஞானி, இந்திய விவசாய ஆராய்ச்சி கழுகம். (I C A R)

 

 

For best Quality Olive oil

olive oil

Delmonte Brand Olive oil

Del monte

Read More  Land Resources

Mountain Eco system

1,886 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *