கஜா புயல் இழந்துபோன வளங்களை மீட்டெடுக்கும் சில வனப்புரட்சி கொள்கைகள்

கஜா புயல் இழந்துபோன வளங்களை மீட்டெடுக்கும் சில வனப்புரட்சி கொள்கைகள்

Dr. Samraj about கஜா புயல்

                                                                                                                   டாக்டர். பா. சாம்ராஜ்
                                            முன்னாள் தலைமை வனவியல் விஞ்ஞானி, இந்திய விவசாய ஆராய்ச்சி கழுகம். (ICAR)

                 தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பல மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை அந்த பகுதி மக்கள் கண்டிராத ஒன்று ஆகும். இந்த டெல்டா மாவட்டங்கள் வெள்ள காடானது தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. ஆகும். இதை தேசிய பேரிடராக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
              ஏனென்றால் மனிதர்களுக்கு உணவு மிகவும் முக்கியமான பொருளாகும். இதை உருவாக்கித் தரும் உழவுத்தொழில் அவனது தொழில்களிலே முதன்மையானதாக உள்ளது. காடுகள் இத்தொழிலுக்கு நீர் மற்றும் இயற்கை உரம் அளித்து எல்லா வகையிலும் உறுதுணையாக உள்ளது. மரங்களோடு இசைந்து மனிதன் வாழக் கடமைப்பட்டவன். இது இயற்கையின் நீதி. இந்த நீதியை பின்பற்றாமல் போனால் “கஜா புயல்” போன்ற சொல்லி முடியாத துயரங்களை நாம் சந்திக்க வேண்டி வரும். மனிதனுக்கு இதயம் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வாறே உலகத்துக்குக் காடுகள் பராமரிப்பு முக்கியமானவை. இதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே மனித சமுதாயம் நிலையான வளர்ச்சி அடைந்து இவ்விதமான போரிடர்களை நோரிடாதவாறு தடுக்க முடியும்.
           போரிடர்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து சம்பவங்களையும் மிகத் திறமையாக மேலாண்மை செய்வதற்காக தேசிய போரிடர் மேலாண்மைச் சட்டம் – 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி மாநிலத் திட்டங்களையும் தயாரித்துச் செயல்படுத்த வேண்டும்.
           போரிடர் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காகக் கைகொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை கீழே காண்போம்.
· துயர் துடைப்பு நடவடிக்கைகளை ஆய்வுத் திட்டங்களுடன் ஈடுபடுத்தி செயல்படுத்தல்.
· திறன் வளர்த்தல் மற்றும் தயார் நிலை வழிமுறைகளை செயல்படுத்தல்.
· மாநில அரசின் ஒவ்வொரு துறைகளுக்கான கடமை மற்றும் பொறுப்பினை நிர்ணயித்தல்.
· போரிடர் எச்சரிக்கை மற்றும் போரிடர் காலங்களில் உடனடியாகச் செயல்படும் விதமாக வெவ்வேறு அரசுத் துறைகளின் கடமை, பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருத்தல்.

கஜா புயல் பேரழிவுகளைத் தடுக்க

          பேரழிவுகளைத் தடுக்க மத்திய மாநில அரசுகளின் உதவியோடும் மேற்பார்வையுடனும் திட்டமிட்டு நிவாரணப்பணிகளை நெடுங்கால நோக்கோடு எதிர்கால சந்ததியினாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிவாரணப்பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும். இயன்றவரை மனிதன் இயற்கையோடு மோதாமல் ஒன்றிணைந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நிவாரண உதவிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கிடைத்தும். தொழில்நுட்ப ரிதியாக நிவாரணப் பணிகளைச் செயல்படுத்தி பராமரிக்காதக் காரணங்களால் பேரழிவுகளை மக்கள் மீண்டும் மீண்டும் சந்திக்க நோரிடுகிறது. இதனால், கோடிக்கணக்கான பணமும் வீணாகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, விஞ்ஞான ரிதியில் அரசு கொண்டு வரும் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை நன்கு செயல்படுத்த பொதுமக்களையும் தொண்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன். இப்படிப்பட்ட பேரழிவுகளை குறைக்க, அரசும் மக்களும் ஒத்துழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு எதிர்கால இந்தியாவை பேணிப் பாதுகாக்க முன்வருவோமாக!

            இவ்வாறு நம்மிடம் இருக்கின்ற வளங்களையும் நிதி வசதியையும் பயன்படுத்தி தொலைநோக்கில் அனைத்து தரப்பினரும் செயல்பட்டால் உலகமயமாக்கலின் தீமைகள் குறைந்து அதன் நன்மைகள் சாதாரண மக்களைச் சென்றடைய வாய்ப்புகள் உருவாகும். நமது கிராமங்களும், நகரங்களும் இதனால் வளமடைவதோடு, நிலையான வளர்ச்சியையும் அடைய இயலும். மக்கள் தொகை மிகவும் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது. இதனை எல்லா சமயத்தினரும் உணர்ந்து அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தினை பின்பற்றி அளவுள்ள மகிழ்ச்சியான குடும்பம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு வராமல் நாட்டின் இயற்கை வளங்களை காப்பாற்றி நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், தேசிய வருமானத்தை பெருக்கவும் காடுகளை காப்பது நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஆகவே, மனிதன் சுற்றுப்புற சூழலில் மேலும் மேலும் குறுக்கிட்டு அழிக்காமல் பேணிப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
           “இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டே மனித நாகரிகம் மலர்ந்து வருகிறது. எனவே, இயற்கைச் சூழலைக் காக்க வேண்டிய கடமையினை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
“வனமின்றிப் போனால்
மனித இனமின்றிப் போகும்” என்பது முதுமொழி.

கஜா புயல் வனப்புரட்சிக் கொள்கைகள்

இந்திய வனம் – 2020 என்ற இலக்கை நாம் அடைய ஒரு சில வனப்புரட்சிக் கொள்கைகள் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை.
· பொதுமக்களை பெருமளவில் வனமாக்குதல் திட்டங்களில் பங்கெடுக்க வைப்பது.
· அனைத்து பொதுச்சேவை துறைகளிலும் (ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே, வேளாண்மை, தோட்டக்கலை, குடும்ப நல வாரியம், போக்குவரத்துத்துறை) காடுவளர்ப்புப் பிரிவு அமைத்து செயலாற்றுவது.
· தற்போது உள்ள வனப்பரப்பின் நில அளவை மூலம் மதிப்பீடு செய்வது.
· வனம் சாராத பகுதிகளில் காடுவளர்ப்பு திட்டத்தை செயலாக்க தேசிய வனக்குழு (National Tree Council) அமைப்பது.
· மாத, வருட மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறும் அனைத்து தரப்பு மக்களும் தங்களது வருமானத்தில் 0.5 – 2.0 சதவீதத்தை வனவளர்ச்சிக்கு அளிப்பது உகந்த திட்டமாகும். இதற்கு வருமான வரி விதிப்பில் 100 சதவீத வாpவிலக்கு அளிக்க வேண்டும்.
· தேசிய வன நிதி (National Tree Fund) அமைத்து பொதுமக்களிடமும் செல்வந்தர்களிடமும் நன்கொடை பெறுவது. அதன் மூலம் பல்வேறு வன திட்டங்களை செயலாக்குவது.
· NSS/NCC போன்று பள்ளி, கல்லூரிகளில் வனச்சேவை குழு: (Forest Service League – FSL) ஆரம்பிப்பது.
· பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஒரு மாணவன் – ஒரு மரம் (One Student One tree) என்ற திட்டத்தை செயல்படுத்துவது.
· ஐந்தாண்டு திட்டங்களில் வனத்துறைக்கு 3 முதல் 5 சதவீத நிதி ஒதுக்கீடு செய்வது (கடந்த ஆணடுகளில் இது 0.5 – 1.5 சதவீதமே)
· நகரங்களில் வீட்டுமனைகள் அங்கீகரிக்க 10 சதவீதப் பொது இடத்தை மரம் வளர்க்க வற்புறுத்துதல். (தற்போது இம்முறை இருப்பினும் நடைமுறையில் இல்லை எனலாம்)
· வேளாண்மை போன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வனஇயல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்துதல்.
· வனஇயல் பட்டதாhpகளை முழுமையாகப் பயன்படுத்துவது. மண்டல வன ஆசிரியர்களாக பட்டதாரிகளை நியமிப்பது.
· பொது பல்கலைக்கழகங்களில் இளமறிவியல் பட்டப்படிப்பில் வனஇயல் பாடத்தை துணைப்பாடமாக அறிமுகப்படுத்துதல்.
· புதியதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகளும், கல்வி நிலையங்களும் குறைந்தது 10 சதவீத நிலப்பரப்பில் காடுகள் அமைக்க வேண்டும் என்று நிர்ணியிப்பது.
· கிராம மக்களிடையே வனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
· பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் கிராம வனமாக்குதல் திட்டத்தையும், நகராட்சி, மாநகராட்சிகள் மூலம் நகர வனமாக்குதல் திட்டத்தையும் தீவிரமாகச் செயல்படுத்துதல்.
· அடுத்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டமும் மாநிலமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டம் தீட்டி இந்திய வனம் 2020 என்ற இலக்கை அடைய ஆவன செய்வதற்கு வனப்புரட்சிக்கு இன்றே வித்திடுவது.
மரங்கள் ஏராளமான அளவில் நன்மைகள் கொடுக்கின்றன. அவற்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும், ஏராளமாக பயன்கள் கிடைக்கின்றன. எனவே மனித குலத்திற்கு உணவு, எரிபொருள், தீவனம், பழங்கள், பட்டை மற்றும் உரம் ஆகியவற்றைத் தரும் மரங்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
வனம் பெருக்குவோம்! வளம் பெறுவோம்
மனிதம் வளர்ப்போம்! புனிதம் பெறுவோம்!
வனப்புரட்சிக்கு வித்திடுவோம்!
                இதை அனைவரும் மனதில் வைத்து, மரங்களை அழிக்காமல் விவசாயிக்கு தேவையான தகுந்த பண்ணைக் காடுகளை வளர்ப்போம் என்ற உறுதிமொழியை எடுப்போம். புதிய காடு வளர்க்கும் திட்டத்தை மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே செயல்படுத்த முடியும். இதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்.

Read more தார் பாலைவனத்திற்கு ஒலிவ மரம் போல் குமரி கடற்கரைக்கு தேவை பனை மரம்

4,736 total views, 7 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *