இழந்த பெருமையை மீட்டு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்

இழந்த பெருமையை மீட்டு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

         கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் ஆகும். இந்த ரயிலில் நாகர்கோவிலிருந்து தினசரி சராசரியாக 800 முதல் 1000 நபர்கள் வரை பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் ஐம்பது சதமானம் இந்த ரயில் மூலமாக கிடைத்து வருகிறது. கன்னியாகுமரி முதல் விருதுநகர் வரை  உள்ள பகுதி மக்களுக்கு சென்னை செல்ல முதலில் சென்னை சென்று சேரும் கன்னியாகுமரி  எக்ஸ்பிரஸ் ரயில்தான் முதல் தேர்வாக உள்ளது. இதனால் மற்ற ரயில்களை காட்டிலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் இந்த ரயில் முதலில் செல்லும் நம்பகமான சூப்பர்பாஸ்டு ரயில் ஆகும்.

குமரியிலிருந்து சென்னைக்கு முதல் ரயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

               திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து தமிழ்மொழி மக்கள் உள்ள பகுதிகளை பிரிந்து புதிய கன்னியாகுமரி மாவட்டமாக உதயமாகி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தாய்தமிழகத்துடன் இணைந்தது. தாய் தமிழகத்துடன் இணைந்தாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் திருநெல்வேலிக்கு பேருந்துகளில் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர் நீண்டகாலத்துக்கு பிறகு கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 1994-ம் ஆண்டு நேரடியாக ரயில் மூலமாக இணைக்கப்ட்டு அந்த ரயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஆரம்பகாலகட்டங்களில் சென்னை எழும்பூர் மார்க்கம் மீட்டர் கேஜ் இருந்த காரணத்தால் ஈரோடு வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. பின்னர் சென்னை எழும்பூர் மார்க்கம் அகலபாதையதாக மாற்றம் செய்யப்பட்டபிறகு சென்னை எழும்பூர்க்கு மாற்றம் செய்யப்பட்டது.        

                        குமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இந்த ரயில் அதிகாலை செல்லும்படியாக இயக்கப்படுவதால் குமரி மாவட்ட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். இவ்வாறு இயக்கப்படும் ரயில் இரண்டு செட் ரயில் பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கன்னியாகுமரிக்கு காலையில் வந்து சேர்ந்ததும் அந்த ரயில் பெட்டிகள் கன்னியாகுமரி – நாகர்கோவில் பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காலை முதல் மாலை வரை காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட ரயில் மாலை நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் ரயிலாக சென்று அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. இதைப்போல் பெங்களுர் – கன்னியாகுமரி ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் இவ்வாறு இயக்கப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முழு இரவும் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காலியாக நிறுத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த இரண்டு ரயில்களும்  2014-ம் ஆண்டு வரை இவ்வாறு இயக்கப்பட்டது.

இணைத்து இயக்கம்

               கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு இவ்வாறு இரண்டு ரயில்களும் இவ்வாறு நிறுத்தி வைப்பதை தவிற்பதறகாக வேண்டி பெங்களுரிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி வரும் ரயிலின் பெட்டிகள் மாலையில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்ட்டு வந்தது. இதைப்போல் மறுமார்க்கம் கன்னியாகுமரிக்கு வரும் ரயில் பெட்டிகள் பெங்களுர் ரயிலாக புறப்பட்டு சென்றுவிடுமாறு இயக்கப்பட்டது. இவ்வாறு இயக்கப்பட்ட காரணத்தால் பெங்களுர் – கன்னியாகுமரி ரயில் கன்னியாகுமரிக்கு காலதாமதமாக வந்து சேர்ந்தால் சென்னை செல்லும் கன்னியாகுமரி ரயிலும் காலதாமதமாக பல நாட்களில் சென்றது. இதனால் குமரி மாவட்டத்திலிருந்து நமது மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவந்தனர்.

       இவ்வாறு இணைப்பு ரயிலாக இயக்கப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  ரயில் அதிக நாட்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வந்துது. இதனால் குமரி மாவட்ட பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் இந்த ரயில் இயக்க தேவையாக பெங்களுரிலிருந்து கன்னியாகுமரி வரும் ரயில் தாமதமாக வந்த காரணத்தாலேயே காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட பயணிகள் rake sharing arrangement   என்று சொல்லப்படும் இந்த இணைப்பு ரயில் திட்டத்தை ரத்து செய்து முன்பை போல தனிதனி ரயில்களாக இயக்க வேண்டும்  என்று கோரிக்கை வைத்தனர். இதன்பலனாக தற்போது ரயில்வேத்துறை இந்த திட்டத்தை ரத்து செய்து தனிதனி ரயில்களாக ஆகஸ்டு 1-ம் தேதி முதல இயக்கி வருகிறது. தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சரியான காலஅட்டவணையில் இயக்கப்பட்டு வருகிறது. 

              கேரளாவில் கடும் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் கடந்த ஒரு வாரகாலமாக ரத்து செய்யப்பட்டும், ஒரு சில ரயில்கள் நாகர்கோவில் வழியாகவும் இயக்கப்பட்டது. இவ்வாறு இயக்கப்படும் போதும் நாகர்கோவிலிருந்து இயக்கப்படும் ரயில்களான  கன்னியாகுமரி – சென்னை, நாகர்கோவில் – பெங்களுர், நாகர்கோவில் – கோவை, கன்னியாகுமரி – ராமேஸ்வரம் போன்ற எந்த ஒரு ரயிலும் ரத்து செய்யப்படவில்லை. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு இயக்கியது போல பெங்களுர் – கன்னியாகுமரி ரயிலுக்கு இணைப்பு ரயிலாக இயக்கிவந்திருந்தால் கடந்த ஒரு வாரா காலமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் சேர்த்து ரத்து செய்யப்பட்டிருக்கும். அதிஷ்டவசமாக ஆகஸ்டு 1-ம் தேதி முதல் இந்த இணைப்பு ரத்து செய்யப்பட்டதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு நாள் கூட ரத்து செய்யப்படவில்லை. தற்போது இந்த ரயில் இழந்த தன் பெருமையை சிறிது சிறிதாக பெற்று பயணிகள் மத்தியில் நம்பிக்கையை பெற்று வருகிறது.

எல்.எச்.பி., பெட்டிகள்

              ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்கள் இந்திய ரயில்வே துறையில் தற்போது அதிக ரயில்கள் இயக்கப்பட்டு பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய அதிநவீன மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் 2000-மாவது ஆண்டு முதல் இந்திய ரயில்வேத்துறையில் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. முதன் முதலில் 20 குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகள் ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு புதுடில்லி – லக்னோ மார்க்கத்தில் சதாப்தி ரயிலில் இயக்கப்பட்டது. பின்னர் ஜெர்மனி தொழில்நுட்ப பரிமாற்றத்தின் பிறகு அந்த தொழில்நுட்பததை இந்தியாவில் பயன்படுத்தி பஞ்சாப் மாநிலத்தில் கபுர்த்தலாவில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலை மற்றும் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் இந்த அதிநவீன பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

குமரிக்கு எல்.எச்.பி பெட்டிகள்

                இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டாலும் இதுவரை தெற்கு ரயில்வேக்கு உட்ப்பட்ட எந்த ஒரு தினசரி ரயிலும் இந்த எல்.எச்.பி பெட்டிகள் கொண்ட ரயிலாக இதுவரை இயக்கப்படவில்லை. முதல் ரயிலாக திருநெல்வேலி – பிலாஸ்பூர் ரயில் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்து இயங்கினாலும் இந்த ரயில் நாகர்கோவிலுக்கு நடுஇரவு வரும் காரணத்தாலும், கேரளா வழியாக சுற்றுபாதையில் இயங்குவதாலும் குமரி மாவட்ட பயணிகள் பயன்படுத்தாத காரணத்தால் இந்த ரயிலை ரயிலாகவே குமரி மக்கள் கருதுவது கிடையாது. குமரி பயணிகள் பயன்படுத்தும் விதத்தில் மேற்கு ரயில்வே மண்டலம் காந்திதாம் – திருநெல்வேலி வாராந்திர ரயிலை எல்.எச்.பி பெட்டிகள் கொண்ட ரயலாக நாகர்கோவில் டவுண் வழியாக இயக்கி வருகிறது. இந்த ரயில்தான் குமரி மாவட்டம் வழியாக இயக்கப்பட்ட குமரி பயணிகள் பயன்படும் படியான முதல் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில் ஆகும். குமரி மாவட்டத்தில் தற்போது இயக்கப்பட்டுவரும் ரயில்களில் கன்னியாகுமரி – சென்னை ரயில் குமரி மக்களின் அதிக பயணிகள் பயன்படுத்தும் மிகமிக முக்கிய ரயில் ஆகும். இந்த ரயிலை எல்.எச்.பி பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்க வேண்டும் என்பதே குமரி மாவட்ட பயணிகளின் விருப்பம் ஆகும். இவ்வாறு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கும் போது இந்த ரயில் மேலும் பயணிகள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று ரயில்வேத்துறைக்கு நல்ல வருவாயை பெற்று கொடுக்கும்.

நாகர்கோவிலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினசரி ரயில்

               நெல்லை மாவட்ட பயணிகளுக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலும், தூத்துகுடி மாவட்ட பயணிகளுக்கு முத்துநகர் ரயிலும் செங்கல்பட்டு தென்காசி பகுதி பயணிகளுக்கு பொதிகை ரயிலும் அதிகாலை சென்னை செல்லதக்க வகையில் காலஅட்டவணை அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. ஆனால் குமரி மாவட்ட பயணிகளின்  மற்றும் கன்னியாகுரிக்கு வரும் சுற்றுலா பக்தர்கள் என அனைவரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை நம்பியே உள்ளனர். இதனால் நாகர்கோவிலிருந்து சென்னைக்கு தனியாக தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் ரயில்வேத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு புதிய ரயில் அறிவித்து அந்த ரயில் அதிகாலை 4:00 முதல் 5:00 மணிக்குள் சென்னை சென்ட்ரல் செல்லதாக்க வகையில் அறிவித்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால் அதிகாலையில் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு பல்வேறு அலுவல் நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக சென்னையிலிருந்து வடஇந்தியாவுக்கு செல்லும் ரயில்களுக்கு இணைப்பு ரயில் வசதி கிடைக்கும்.        கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து குமரியிலிருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக மாலை சூரிய மறைவு முடிந்த பிறகு குமரியிலிருந்து புறப்படுமாறு இயக்கினால் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

Read More

குமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை 2018

342 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *