பிறந்த நாளை இயற்கையோடு இணைந்து கொண்டாட விரும்பும் குமரி விஞ்ஞானி

பிறந்த நாளை இயற்கையோடு இணைந்து கொண்டாட விரும்பும் குமரி விஞ்ஞானி

  

Dr. Samraj

டாக்டர். பா. சாம்ராஜ்

முன்னாள் தலைமை வனவியல் விஞ்ஞானி, இந்திய விவசாய ஆராய்ச்சி கழுகம். (I C A R)

                செப்டம்பர் 24, 2018 அன்று எனது 84 வது பிறந்தநாளை நினைவூட்டும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் இழந்த அழகை திரும்ப கொண்டுவரும் விதமாக “கடவுளின் சொந்த நாடு” கேரளாவின் இயற்கை செல்வம், குறிப்பாக பாறைகள், கடலோர சமவெளிகளோடு சேர்த்து பனை மர கொட்டகைகளை நடவு செய்வதன் மூலம் இயற்கை சமநிலைக்கு கொண்டுவர உதவும். நான் கிராமப்புற பின்னணியை சேர்ந்தவன்.

              மேலும் குமரி மாவட்ட பனை மரங்களின் வரலாற்றை குறிப்பாக கல்குளம் மற்றும் விலவன்கோடு தாலுகாக்களில் முன்பு செயல்பட்டதை நன்கு  அறிந்திருக்கிறேன். முற்காலங்களில் ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இந்த பனைமரம் விளங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது அவை அழிந்துவிட்டன.  செப்டம்பர் மாதத்தில் எனது பிறந்தநாள் கொண்டாட்டமாக கோட்டார் மறைமாவட்டத்தில் (11-௦9-2௦18) நடைபெற்ற பல் சமய உரையாடலில் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை டேவிட் அவர்கள் மற்றும் கன்னியாகுமரி ஆத்மீக தோட்டம் இயக்குனர் அருட்தந்தை. வின்சென்ட் பணிவந்தன் அவர்கள் என்னை கௌரவித்து என்னுடைய பனைமரம் நடும் முயற்சியை வரவேற்று பாராட்டி 83 பனம் கொட்டைகள் வழங்கினார்கள். மேலும் பொதுமக்களுக்கு கொடுப்பதற்கு ஏராளமான பனைமரக் கொட்டைகள் வைத்து. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்கிறதை பார்த்து அவர்களை பாராட்டி மகிழ்ந்தேன்.

                மேலும் இந்த திட்டத்தை ஆதரித்து தொடங்கி செயல்படுத்தும் குமரி மகா சபை குறிப்பாக இதன் ஸ்தாபக தலைவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ராவின்சன் அவர்களையும் அவர்கள் குழுவையும் பாராட்டி செயல்திட்டம் அமைத்துள்ளோம்.  என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ அய்யப்பா கல்லூரியில் 83 பனைமரக் கன்றுகள் நடுவதோடு பிரதம விருந்தினராக டாக்டர் எல். மஹாதேவனுடன் ஒரு நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

               இதை தொடர்ந்து 25 ஆம் தியதி நான் படித்த மார்த்தாண்டம் அரசு மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் திரு N சுபானந்த ராஜ் அவர்கள் முன்நிலையில் மார்த்தாண்டம் ரோட்டரி சங்கம் பங்கேற்புடன் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். நம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலை மற்றும் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் தெரிந்து கொள்ள இத்துடன் ஒரு தொகுப்பையும்  தமிழ் மொழியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சாலைஓரங்கள், கடலோர சமதள பகுதிகள், ஆன்மீக பகுதிகள் கல்விநிறுவன வளாகங்கள் ஆகியவற்றிலும் நட்டு நம் வருங்கால சந்ததிகள் ஆபத்தின்றி வாழலாம்.

Read more  பனைமரம்

1,917 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *