கோடை வெயிலுக்கேற்ற மூன்று பழங்கள் (Watermelon, Lemon, Grapes)

கோடை வெயிலுக்கேற்ற பழங்கள் (Watermelon, Lemon, Grapes)

தர்புசணி (Watermelon)

கோடை வெயிலுக்கேற்ற பழங்கள்

கோடை காலத்தில் தர்புசணி (watermelon) நம் தாகத்தை தணிக்கும் வரப்பிரசாதம். எனவே நம் உடலின் நீர்சத்தைஅதிகரிப்பதிலும், எடையைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழத்தில் இரும்புச்சத்தும் மெக்னீசியமும் அதிக அளவில் காணப்படுவதால் உடலில் உள்ள செல்களை புதுப்பித்து இளமையாக வைக்கிறது. நம் உடலின் இரத்த அழுத்தத்தையும், நீரிழிவையும் சமநிலைப்படுத்த இப்பழம் உதவுகிறது.

எலுமிச்சை (Lemon)

கோடை வெயிலுக்கேற்ற பழங்கள் lemon

 

மனிதனின் தாகத்தை உடனடியாக தீர்க்கும் இயற்கை நிவாரணி எலுமிச்சை (lemon). எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மிக அதிக அளவில் காணப்படுவதால் நாம் இளமையான பொலிவை அடைய முடியும். உண்ணும் உணவை ஜீரணிக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் வயிற்றுப்போக்கு, வாந்தியை கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை ஜூசுடன் இஞ்சி சேர்த்து, சர்க்கரை கலந்து சாப்பிட்டால் தாகம் தணிவதுடன் வெயிலினால் ஏற்படும் நீர்சத்து இழப்பை கட்டுப்படுத்தலாம். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடை குறையும்.

திராட்சை (Grapes)

கோடை வெயிலுக்கேற்ற பழங்கள் grapes

திராட்சை (Grapes) மாலிக் ஆசிட், டேனிக் ஆசிட் போன்றவற்றை அதிக அளவில் பெற்றிருப்பதால் சருமத்தில் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. திராட்சை வகைகளில் கறுப்பு திராட்சை தான் மிகவும் சக்தி வாய்ந்தது. இது இரத்தத்தை சுத்தப்படுத்தி மலச்சிக்கலை போக்குகிறது. இது நாளமில்லா சுரப்பிகளை சமநிலைப்படுத்துகிறது. இதன் விதைகள் கேன்சர் நோய்க்கு மிகச்சிறந்த அரு மருந்தாக பயன்படுகிறது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை இதற்கு மிக அதிகமாக உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Follow us on Facebook

read more  uses of Dates against Heart Attack

558 total views, 1 views today

One thought on “கோடை வெயிலுக்கேற்ற மூன்று பழங்கள் (Watermelon, Lemon, Grapes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *