ஜலதோசத்தால் உடலில் இருந்து வெளியேறும் சளியும் நல்லதே

ஜலதோசத்தால் நம் உடலில் இருந்து வெளியேறும் சளியும் நல்லதே

சளி உருவாகும் விதம்

ஜலதோசத்தால் நம் உடலில் இருந்து வெளியேறும் சளியும் நல்லதே. நம் உடம்பில் உள்ள கழிவுகள் எவ்வாறு வியர்வை மூலம் வெளியேறுகிறதோ அது போலத் தான் இந்த சளியும். நாம் சளி வந்து விட்டாலே மனச்சோர்வு அடைந்து விடுகிறோம். ஆனால் இந்த சளி நம் உடலுக்கு முக்கியமான ஒன்றாகும். நம்முடைய உடல் முழு ஆரோக்கிய நிலையில் இருக்கும் போது சளியை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் சளியை உற்பத்தி செய்யக்கூடிய திசுக்கள் நம் உடலின் வாய், தொண்டை, நுரையீரல், மூக்கு, குடல், இரப்பை போன்ற இடங்களில் இருந்து பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது.
இந்த சளியில் பாக்டீரியா, வைரஸ்களை கண்காணித்து, கண்டு கொள்ள தேவையான Antibodies, Protein, Enzymes போன்ற பல்வேறு உயிரணுக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

நம் உடல் இயற்கையாக நல்ல முறையில் விளைவிக்கப் பட்ட உணவுப் பொருட்களை எளிதாக ஜீரணித்து விடுகிறது. ஆனால் நாம் இன்று பெரும்பாலும் இரசாயன உணவுப் பொருட்களையே பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்தும் போது சரியாக ஜீரணிக்க முடியாமல் உடல் தடுமாறுகிறது. அவ்வாறு உருவாகும் கழிவுப்பொருள் தான் இந்த சளி.

சளியை அடக்கி வைப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்

எனவே இந்த சளியை வெளியேற்றுவது நம்முடைய முக்கியமான கடமையாகும். ஆனால் சளி வந்த உடனே நாம் அலோபதி மருந்துகளை உட்கொண்டு, சளியை வெளியேற்றாமல் உள்ளேயே அடைத்து வைத்து விடுகிறோம். இந்த சளியானது உறைந்து கட்டியாகி நம் நுரையீரலில் படிகிறது. அதை சமாளிக்க நம் உடல் உள்ளுறுப்புகள் ஒவ்வொரு நாளும் பாடாய் படுகின்றன.

எனவே இயற்கையாக கிடைக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகளை உண்பதே நம் உடலுக்கு நலம்.

சளி உருவாகும் விதம்

இந்த சளியானது நம் உடலில் 2 வழிகளில் உருவாகிறது.
* உடல் சூட்டால் உண்டாவது
* உடல் குளிர்ச்சியால் உண்டாவது

உடல் சூட்டால் உண்டாகும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வாய் வழியாகவே வெளியேற்ற முடியும். ஏனென்றால் இது மூக்குக்கும் தொண்டைக்கும் இடையே உருவாகக் கூடியது. கூடவே கடுமையான வறட்டு இருமலும் வந்து சேரும். எனவே இந்த வகை சளி உண்டானால் தூதுவளையை தவிர்ப்பது நல்லது. இதற்கு மாதுளை தோல் சாறு, பனை வெல்லம், தேன் மிக நல்லது.

உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது உருவாகும் சளியானது பச்சை, வெள்ளை நிறத்தில் காணப்படும். இதை மூக்கின் வழியாக வெளியேற்றலாம். இந்த சளிக்காக நாம் இரசாயன மருந்துகளை பயன்படுத்த கூடாது. கண்டிப்பாக உடலை விட்டு வெளியேற்றிவிட வேண்டும். சுக்கு, மிளகு, பனை வெல்லம் இட்டு காப்பி அருந்தி வந்தால் சளி எளிதாக வெளியேறி விடும்.


எனவே சளி வந்து விட்டால் இயற்கையாக வெளியேற்ற வேண்டும் இரசாயன மருந்துக்கள் மூலம் உடலில் அடக்கிவிடக் கூடாது.

Read more : Info

4,949 total views, 7 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *