தர்புசணிப் பழம் (watermelon) வாங்கும் போது கவனிக்க வேண்டியவை நான்கு

தர்புசணிப் பழம் (watermelon) வாங்கும் போது கவனிக்க வேண்டியவை நான்கு

தர்புசணிப் பழம் (watermelon) வாங்கும் போது கவனிக்க வேண்டிய நான்கு முக்கியமானவை

நாம் தர்புசணிப் பழம் வாங்கும் போது அவற்றின் இனம், அளவு, காம்பு, உருவான இடம் ஆகியவற்றை நன்கு பார்த்து தான் வாங்க வேண்டும்.

பொதுவாக நாம் வாங்கும் தர்புசணி பழத்தின் இனிமை இந்த நான்கு காரணிகளை பொறுத்தது.

  • பாலினம்,
  • அளவு,
  • காம்பு,
  • உருவான இடம்.
பாலினம்

முதலில் அதன் பாலினத்தை பற்றி பார்ப்போம்.

பெண் தர்புசணி ஆண் தர்புசணியை காட்டிலும் இனிமையானது மற்றும் சுவையானது. பெரும்பாலும் ஆணானது பார்ப்பதற்கு நீளமாக காணப்படும். பெண்ணானது உருண்டையாகவும், குண்டாகவும் இருக்கும். இந்த இரண்டை தவிர வேறு வடிவங்களில் இருந்தால் அது நீர்சத்து மற்றும் சூரிய ஒளி கிடைக்காமல் வளர்ச்சி குன்றியது. இதை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எப்போதும் பெண் தர்புசணியை தேர்வு செய்வதே நல்லது.

பருமன்

அது போல நாம் தேர்வு செய்யும் போது மிகச் சிறிய அளவையோ அல்லது மிகப்பெரிய அளவையோ தேர்வு செய்யாமல் இடைப்பட்ட அளவை தேர்வு செய்வதே நல்லது. அந்த வகை பழங்கள் தான் மிகவும் சுவையானவை.

காம்பு

நாம் தர்புசணி வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் காம்புகள் தான். காம்பு பச்சை நிறமாக இருந்தால் அது கனிவதற்கு முன்பே பறிக்கப்பட்ட பழமாகும். காம்பு காய்ந்து கறுப்பு நிறத்தில் காணப்பட்டால் அது இயற்கையாகவே நன்றாக கனிந்த கனியாகும்.

உருவான இடம்

நாம் வாங்கும் பழத்தின் தோல் பகுதியின் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் இருந்தால், அந்த பழம் அதிக நாட்கள் சூரியஒளியின் கீழ் இருந்து கனிந்தது என்று அர்த்தம். மாறாக வெண்மை நிறத்தில் இருந்தால், அது நன்றாக கனியாத கனி.

மேலும் மேல் பகுதியில் சில இடங்கள் காப்பி நிறத்தில் சொர சொரப்பாக இருந்தால், அது நன்கு கனிந்த கனி மிகவும் சுவையான கனி. ஏனென்றால் அந்த பகுதி தான் அதன் சுவை அறிந்து தேனீக்கள் தேன் சேகரித்த பகுதி.

எனவே நாம் தர்புசணி வாங்கும் போது இந்த நான்கு காரணிகளையும் பார்த்து தெரிவு செய்வது நலம் பயக்கும்.

781 total views, 3 views today

2 thoughts on “தர்புசணிப் பழம் (watermelon) வாங்கும் போது கவனிக்க வேண்டியவை நான்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *