நன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்

நன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்……….

நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் Nagercoil-head-postoffice2


கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த அஞ்சல் நிலையத்தில் தற்போது பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக அஞ்சலக சேவைக்கான முக்கியத்துவம் அங்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலு‌ம் டோக்கன் சிஸ்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு முறையான வழிகாட்டுதல் இல்லாததால் வாடிக்கையாளர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் 1 பதிவுத் தபால் அனுப்ப குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் தற்போது பொது கவுண்டர்களில் அதிகபட்சமாக 10 பதிவுத் தபால்கள் மட்டுமே அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 தபால்களுக்கு மேல் வாடிக்கையாளர்கள் பல்க் தபாலில் அனுப்ப வற்புறுத்தப் படுகிறார்கள். இதற்கு ஒரு கடிதத்திற்கு 1 ருபாய் 20 காசுகள் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அஞ்சல் நிலையத்தின் இந்த செயல் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை குறைக்கிறது. அஞ்சல்துறை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் இத்தகைய இழி செயல்களை நீக்கி சிறப்பான சேவையை தரும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Read more
திருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்….

7,455 total views, 29 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *