குமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றம்

குமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றம்

ரயில்களின் கால அட்டவணை

        ரயில்வே துறை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்த வருடத்துக்கான புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டது.  இந்த அட்டவணையில் தற்போது இயங்கிகொண்டிருக்கும் ரயில்களின் நேரத்தை மாற்றி புதிய நேரத்தில் இயக்குதல், வேகத்தை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகள் இடம்பெறும். இந்த கால அட்டவணையில் குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ஒருசில ரயில்களின் காலஅட்டவணையை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகர்கோவில் – மும்பை 16352 ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு 60 நிமிடம் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் மறுமார்க்கம் 16351 45 நிமிடங்கள் பயணநேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகர்கோவிலிருந்து மதுரை வழியாக மும்பை செல்லும் இரண்டு ரயில்களும் ஓரே நேரத்துக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு ஒரே நேரத்துக்கு நாகர்கோவில் வந்து சேருமாறு காலஅட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிசாமுதீன் – கன்னியாகுமரி திருக்குறள் ரயிலின் ஒரு மார்க்கம் மட்டும் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் 25 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை – நாகர்கோவில் 12667, நாகர்கோவில் – காச்சுகுடா 16354 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயணநேரம் 15 நிமிடம் குறைகிறது. கன்னியாகுமரி – ஹவுரா ரயிலின் பயணநேரம் 10 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. ஒருசில ரயில்களின்  வேகம் அதிகரிக்கப்பட்டு பயணநேரம் குறைக்கப்பட்டுள்ளதைப்போல அதிக அளவிலான ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு பயணநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பயணிகளை அவதிக்குள்ளாக்குகிறது.

    பெங்களுரிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் 17235 ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு 30 நிமிடங்கள் அதிக பயணநேரமாக எடுத்து பெங்களுரிலிருந்து நாகர்கோவிலுக்கு 15மணி 05 நிமிடங்கள் பயணம் செய்து 7:50க்கு பதிலாக 8:20 மணிக்கு வந்து சேமாறு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மறுமார்க்கம் இந்த ரயில் நாகர்கோவிலிருந்து பெங்களுர்க்கு 14மணி 20 நிமிடங்களில் சென்றுவிடும். இதைப்போல் நாகர்கோவில் – மும்பை வாரத்துக்கு நான்கு நாள் ரயில் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு இனி 37மணி 27 நிமிடங்கள் பயணநேரம் ஆகும். இதைப்போல் பல ரயில்களின் பயணநேரம் ஐந்து முதல் 10 நிமிடங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. பெங்களுர் – கன்னியாகுமரி ரயிலின் பயணநேரம் 1மணி 40 நிமிடம் அதிகரிக்கப்பட்டு மாலை 3:20 மணிக்கு வந்து சேரும் இந்த ரயில் தற்போது மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி செல்லுமாறு காலஅட்டவணை மாற்றப்பட்டு பயணநேரம் 21மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடைப்புகுறிக்குள் பழைய புறப்படும் நேரம்

நாகர்கோவிலிருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை

1.    16340 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் – 6:00 (6:30)
2.    16352 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ்  –  6:00 (5:00)
3.    16354 நாகர்கோவில் – காச்சுகுடா எக்ஸ்பிரஸ்  – 8:25 (8:10)
4.    16650 நாகர்கோவில் – மங்களுர் பரசுராம் எக்ஸ்பிரஸ்  – 4:15 (4:20)
5.    56304 நாகர்கோவில் – கோட்டையம் பயணிகள் ரயில் – 12:15 (12:20)
6.    56316 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் ரயில் – 18:15 (18:20)

திருநெல்வேலியிருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை

7.    56718 திருநெல்வேலி – நாகர்கோவில்  பயணிகள் ரயில் – 6:50 (6:55)

கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை

8.    12666 கன்னியாகுமரி – ஹவுரா – 08:00 (7:50)
9.    16525 கன்னியாகுமரி – பெங்களுர் – 10:00 (10:30)

திருவனந்தபுத்திலிருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை

10.    22628 திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி – 11:45 (11:50)
11.    56317 கொச்சுவேலி – நாகர்கோவில் பயணிகள் ரயில் – 13:05 (13:10)
12.    56313 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் ரயில் – 18:00 (18:05)
13.    56315 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் ரயில் – 17:10 (17:15)

சென்னையிலிருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை

14.    16105 சென்னை  – திருச்செந்தூர் – 16:00 (16:05)
15.    12642 நிசாமுதீன் – கன்னியாகுமரி – 18:25 (18:20)

நாகர்கோவிலுக்கு வந்து சேரும் ரயில்களின் கால அட்டவணை

1.    12660 சாலிமர் – நாகர்கோவில் – 21:55 (21:50)    
2.    12667 சென்னை – நாகர்கோவில்  – 7:55 (8:10)
3.    16335 காந்திதாம் – நாகர்கோவில் – 5:00 (4:15) 
4.    16339 மும்பை – நாகர்கோவில் – 3:50 (3:20)
5.    16351 மும்பை – நாகர்கோவில் – 3:50 (4:15)
6.    16605 மங்களுர் – நாகர்கோவில் ஏரநாடு – 23:45 (23:15)
7.    16649 மங்களுர் – நாகர்கோவில் பரசுராம் – 21:25 (20:55)
8.    17235 பெங்களுர் – நாகர்கோவில் – 8:20 (7:50)
9.    22668 கோயம்பத்தூர் – நாகர்கோவில் சூப்பர்பாஸ்டு –  4:55 (4:50)
10.    56718 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் ரயில் – 9:00 (8:55)

கன்னியாகுமரிக்கு வந்து சேரும் ரயில்களின் கால அட்டவணை

11.    12665 ஹவுரா – கன்னியாகுமரி – 10:50 (10:25)
12.    12633 சென்னை – கன்னியாகுமரி – 6:20 (6:15)
13.    12642 நிசாமுதீன் – கன்னியாகுமரி  – 7:55(8:45)
14.    15906 திப்ருகர் – கன்னியாகுமரி – 9:55 (9:50)
15.    16318 ஸ்ரீவைஷ்ணதேவிகத்ரா – கன்னியாகுமரி – 22:25 (21:55)
16.    16381 மும்பை – கன்னியாகுமரி – 12:50 (12:35)
17.    16525 பெங்களுர் – கன்னியாகுமரி – 17:00 (15:20)
18.    22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி – 4:10 (4:05)
19.    56715 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள் ரயில் – 12:15 (12:05)

குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு போய் சேரும் ரயில்களின் கால அட்டவணை

20.    16724 கொல்லம் – சென்னை அனந்தபுரி – 8:10 (8:05)

For bookings Southern Railways

Know more about Best Tourist places in Kanniyakumari

Padmanabhapuram palace

SREE BHAGAVATHY AMMAN TEMPLE

1,178 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *