இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS

இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது Royal Enfield Classic 350 ABS

Royal Enfield Classic 350 ABS


இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் ராயல் என்பீல்டு தலைசிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது. இதன் பிரேக்கிங் சிஸ்டம் மற்ற வாகனங்களை ஒப்பிடுகையில் சற்று தரமற்றதாகவே இருந்து வந்தது. தற்போது இந்த நிறுவனம் தனது classic 350 ABS என்ற புதிய பாதுகாப்பு அம்சம் கொண்ட மாடலை அறிமுகம் செய்கிறது . இதில் பிரேக்கிங் சிஸ்டம் டுயல் சேனல் ABS அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் ஆரம்ப விலை 1.53 லட்சம் ex-showroom, டெல்லி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் Royal Enfield classic 350 ABS மாடலில் பிரேக்கிங் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கிளாசிக் 350 signals edition ல் வழங்கப்பட்ட இந்த ஆப்ஷன் என்ட்ரி லெவல் மாடலில் அறிமுகப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Non ABS மாடலை காட்டிலும் இது 5800 ருபாய் அதிகரித்துள்ளது. 

இருந்தாலும் பாதுகாப்பு அம்சத்தை தவிர வாகனத்தில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 346 சிசி சிங்கிள் சிலிண்டர், 19.8 பி எச் பி பவர், 28 nm டார்க் மற்றும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இஞ்சினே பயன்படுத்த பட்டுள்ளது. மேலும் இந்த classic 350 ABS ல் 280 mm முன்புற மற்றும் 240 mm பின்புற டிஸ்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இந்த மாடல் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
இந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car

For Latest News Follow us on medialeaves in Facebook Twitter

483 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *