சிறுத்தையின் புதிய அவதாரம் மஹிந்திரா எக்ஸ் யு வி300 விரைவில்

மஹிந்திரா எக்ஸ் யு வி 300 mahindra xuv 300

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கடந்த டிசம்பர் 19, 2018 அன்று தன்னுடைய எஸ் 201 குறியீட்டு எண் கொண்ட புதிய காரின் பெயரை Mahindra XUV 300 என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  அதன் பெயர் எக்ஸ் யு வி த்ரீ டபுள் ஓ என உச்சரிக்கப்படுகிறது. எற்கனவே சில புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் Mahindra XUV 300 கார் வரும் பிப்ரவரி மாதம் முதல் பாதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது உலகளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 2.6 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டும், கிரேடு 1 பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் படைத்த சங் யோங் டிவோலி காரின் தளத்தில் உருவாக்கப் படுகிறது. எனவே புதிய Mahindra XUV 300 காரும் உள்புற வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் சங் யோங் டிவோலி காரை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

எக்ஸ் யு வி 500 காரின் வடிவத்தை முன்னிறுத்தி சிறுத்தை முக வடிவ முன் அமைப்பை கொண்ட இந்த காரின் ஹெட்லேம்ப் பனி விளக்குடன் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் ஆர்ச்சுகள் சிறுத்தையின் பக்கவாட்டு மசில் போல் காட்சி அளிக்கிறது. இதனுடன் இணைந்த 17 அங்குல அலாய் வீல் ,
அதிகரிக்கப்பட்ட வீல் பேஸ் பக்கவாட்டை மெருகூட்டுகிறது.

மஹிந்திரா எக்ஸ் யு வி 300 mahindra xuv 300

மேலும் வெளிப் பகுதியில் புரொஜக்ட்டர் லேம்ப், பனி விளக்குகள், டுயல் எல் இ டி டி ஆர் எல் லேம்புகள், எல் இ டி டெய்ல் லேம்புகள், எல் இ டி ஸ்டாப் லேம்ப், சன் ரூஃப் போன்ற முக்கிய அம்சங்களுடன் களம் இறங்க இருக்கிறது.

இது சிறகு வடிவில் அமைக்கப்பட்ட டுயல் டோண் இன்டீரியர், டுயல் ஸ்சோன் எபஃட்டிவ் ஏசி மற்றும் ஹைடெக் வசதி கொண்ட டச் ஸகிரீன் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ் போர்டு ஹை கிளாஸ் பிளாக் மற்றும் லுமினன்ற் சில்வர் ஆகிய இரட்டை வண்ணங்கள் கொண்டது

மஹிந்திரா எக்ஸ் யு வி 300 mahindra xuv 300 interior

Mahindra XUV 300 காரில் முக்கிய பாதுகாப்பு அம்சமாக 7 ஏர் பேக் களும் 4 வீல் களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பயன்படுத்தப்பட்ட அதே இஞ்சின் இந்த மஹிந்திரா எக்ஸ் யு வி300 காரிலும் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இஞ்சின் உயர்தர பவரையும், டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 7 இலட்சம் முதல் 11 இலட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த Mahindra XUV 300 கார் மாருதி சுசுகி விட்டாரா பிரீஸ்ஸா, ஹீண்டாய் கிரேட்டா, ஃபோர்ட் இகோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க Oficial Website
சாலைகளை கலக்க களமிறங்கிய மாருதி சுசுகி புதிய எர்டிகா 2019….
மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி ஒரு கண்ணோட்டம்…………..

538 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *