மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி ஒரு கண்ணோட்டம்

Mahindra marazzo MPV ஒரு கண்ணோட்டம்…………..

மஹிந்திரா மராஸ்ஸோ எம் பி வி

             மஹிந்திரா நிறுவனம் தனது Marazzo MPV காரை கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி 9.99 இலட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்தில் 10000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டது. இந்த காரின் டிசைன் மற்றும் டெவலப்மென்ட்காக மஹிந்திரா நிறுவனம் 1000 முதல் 1500 கோடி வரை செலவிட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் இதன் விலை 30000 முதல் 40000 வரை அதிகரிக்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

          சுறா மீனின் வடிவத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட Mahindra marazzo MPV car சிறப்பான ஏரோடைனமிக் தன்மையும் பெற்றுள்ளது. இது 4585 mm நீளமும், 1866 mm அகலமும், 1774 mm உயரமும் கொண்டு பிரம்மாண்டமான தோற்றத்தில் சாலைகளில் வலம் வருகிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் சுமார் 200mm ஆகும். இந்த கார் m2, m4, m6, m8 என 4 வேரியன்ட்களில் வெளிவருகிறது. இதன் வேரியன்டிற்கேற்றார் போல் 7 சீட்டர் 8 சீட்டர் அமைப்புகளில் வேறுபடுகிறது.

                     D15 1.5 லி டீசல் தொழில் நுட்பத்தை கொண்டு மட்டுமே இயங்க கூடிய இந்த Mahindra marazzo MPV 120 பி எச் பி பவரையும், 300 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது. பல்வேறு தொழில் நுட்ப அம்சங்களை கொண்ட இந்த எஞ்சின் 17 kml வரை மைலேஜ் கொடுக்கும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

                 வெளிப்புறத்தை பொறுத்தமட்டில் ப்ரொஜக்டர் கெட் லைட், எல் இ டி பகல் லைட், எல் இ டி பனி விளக்குகள், சுறா துடுப்பு அமைப்பு போன்ற ஆன்டெனா, 17 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டு பிரம்மாண்டமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

         உள்புறத்தை பொறுத்தமட்டில் 7 inch touch screen infotainment சிஸ்டம், இரண்டு வண்ண கலவை கொண்டு ஆடியோ கண்ட்ரோலை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ரூப் ஏசி, ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், பாலோ மி கெட் லைட், வாய்ஸ் கமென்ட் ஆடியோ சிஸ்டம் ஆகிய சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இதிலுள்ள டச் ஸ்கிரீன் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போண் கணெக்டிவிட்டி திறன் கொண்டது.

               Mahindra marazzo MPV காரில் பாதுகாப்பு அம்சங்களாக ABS பிரேக்கிங் சிஸ்டம், EBD, பிரேக் அசிஸ்ட் உடன் டிரைவர், முன் பயணிக்கென டுயல் ஏர் பேக் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

            மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ காரை ஷிம்மர் சில்வர், மரைனர் மரூண், ஓசியன் பிளாக், ஐஸ்பெர்க் ஒயிட், போசிடன் பர்ப்புள், அக்வா மரைன் உள்ளிட்ட 6 வண்ணங்களில் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையைப் பொருத்தமட்டில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் மாருதி சுசுகி எர்டிகா 2019 மற்றும் ரெனால்ட் லாட்ஜி கார்களுக்கு போட்டியாக வலம் வருகிறது. 

Read more   Maruti Suzuki Ertiga 2018

                       சாலைகளை கலக்க களமிறங்கிய மாருதி சுசுகி புதிய எர்டிகா 2019…. 

Know more about     Mahindra Marazzo official

687 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *