நிஷான் கிக்ஸ் எஸ் யு வி ஜனவரி 2019 ல் இந்தியாவில் அறிமுகம்

நிஷான் மோட்டார் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான Nissan kicks SUV கார் பற்றிய முதன்மை தகவல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் வரும் 2019 ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

Nissan kicks SUV medialeaves 1
kicks SUV front view

V வடிவ பிளாட்ஃபாமில் உருவாக்கப்பட்ட இந்த கார் உலகளாவிய அளவில் ஏற்கனவே விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே வெளிவந்த Renault duster, captur மற்றும் நிஷான் டெரானோ கார்களை போல இந்த Nissan kicks SUV காரும் வெற்றிகரமாக வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Nissan kicks SUV Interior

Interior ஐ பொறுத்தமட்டில் பிரவுண் மற்றும் கறுப்பு நிற டுயல் டோண் கருத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. லெதர் போன்று உருவாக்கப்பட்ட டேஷ் போர்டு மற்றும் டோர் ட்ரிம்கள் சிறந்த interior அமைப்பை காட்டுகிறது. மேலும் WiFi, Bluetooth, smart watch கணெக்டிவிட்டி, ஆக்ஸ் USB கணெக்டிவிட்டி, முன் பின் ஸ்பீக்கர், டுவிட்டர், நேவிகேஷன் மற்றும் டச்ஸ்கிரீன் வீடியோ டிஸ்பிளே கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Nissan kicks SUV interior medialeaves
kicks SUV interior

மேலும் ஆட்டோ ஏசி, கூலிங் குளோவ் பாக்ஸ், முன் பின் சீட்டில் ஆர்ம் ரெஸ்ட், உயரம் மாற்றக்கூடிய டிரைவர் இருக்கை, பின்புற ஏசி வென்ட்ஸ், உள்புற ஆம்பியன்ட் லைட், சூப்பர் விஷன் cluster, luxurious seats போன்ற முக்கிய அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகமான பூட் ஸ்பேஸ் ஐ கொண்டுள்ளது.

Nissan kicks SUV Exterior

Exterior ஐ பொறுத்தமட்டில் முன் பகுதியில் டி ஆர் எல் இணைக்கப்பட்ட எல் இ டி ப்ரொஜக்டர் ஹெட்லேம்ப், பனி விளக்குகள், நிஷான் நிறுவனத்தின் v motion grill, இன்டிகேட்டருடன் கூடிய ORVM ஆகியவற்றை கொண்டு ஒரு சிறந்த SUV காராக காட்சி அளிக்கிறது. மேலும் இந்த Nissan kicks SUV காரின் r 17 5 spoke அலாய் வீல், 210 mm கிரவுண்ட் கிளியரன்ஸ், ரூப் ரெயில், ஷார்க் பின் ஆன்டெனா ஆகியவை வெளிப்புறத்தை அலங்கரிக்கிறது.

Nissan kicks SUV back medialeaves
kicks SUV back view

இதில் ஒரு புதிய அம்சமாக நான்கு புறமும் கேமரா பொருத்தப்பட்டு around வியூ மானிட்டரால் 360 கோணத்திலும் பார்வை கண்காணிக்கப்படுகிறது.
இந்த கார் 4384 mm நீளமும் 1813 mm அகலமும் 1656 mm உயரமும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nissan kicks SUV Engine

Engine ஐ பொறுத்தமட்டில் 1498 சிசி, 106 PS பவர் மற்றும் 143 NM டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.5 H4K பெட்ரோல் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டீசலில் 1461 சிசி, 110 PS பவர் மற்றும் 240 NM டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.5 K9K டீசல் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Nissan kicks SUV Engine medialeaves
kicks SUV Engine medialeaves

Nissan kicks SUV Safety

இந்த Nissan kicks SUV காரில் பாதுகாப்பு அம்சங்களாக ABS with EBD மற்றும் பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 4 ஏர் பேக் சிஸ்டம், VDS (vehicle dynamic control), traction control, cruise control, speed sensing auto door lock, பின்புற பார்கிங் சென்சார், பாலோ மி கெட் லைட் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தன்மையை இந்த கார் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை 11 முதல் 16 இலட்சம் வரை ஷோரூம் விலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more about this car Official website சிறுத்தையின் புதிய அவதாரம் மஹிந்திரா எக்ஸ் யு வி300 விரைவில்

429 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *