திருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்

திருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்….

Thiruvithancode Periyanayagi shrine alter


திருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலம் பல்வேறு அதிசயங்களை தாங்கி, இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. இவ்வாலயம் பற்றி எளிதில் அறியப்படாத சில உண்மைகளை அறிந்து கொள்வோம்.
1.சாதி மதம் பாராமல் அனைத்து மக்களும் சங்கமிக்கும் கிறிஸ்தவ தேவாலயம் இது.
2. இங்கு ஒரு பழைய ஆலயமும், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆலயமும் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருமைகளுக்கெல்லாம் மூலைக் கல்லாக இருப்பது இங்கு அமைந்துள்ள சிற்றாலயம் தான்.
3. இந்த சிற்றாலயத்தில் வீற்றிருக்கும் அன்னை பெரிய நாயகி தான் அதன் பாதுகாவல். உள்ளூர் மற்றும் வெளி மாநில மக்கள் இந்த ஆலயத்தை நாடி அருள் பெற்றுச் செல்கின்றனர்.


4. இந்த ஆலய வடிவமைப்பு கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏனென்றால் இவ் ஆலயத்திற்குள் நுழைந்தால் நிலவும் குளிர் தன்மை மக்களின் மனதை தெளிவு படுத்தி, அமைதியாக தியானம் செய்யும் சூழலை ஏற்படுத்துகிறது.
5. இவ்வாலயத்தின் பீடத்திற்கு வலதுபுறம் நகர்ந்து சென்றால் ஒரு பாதிரியாரின் கல்லறை இருக்கும். தூக்கமின்மையால் அழும் பச்சிளம் குழந்தைகளை அதன் மேல் படுக்க வைத்து உடல் முழுவதும் எண்ணெய் பூசி, ஆலயத்தின் கீழ் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பாட்டி சென்றால் குழந்தை அழாது என்பது உண்மை.
6. இவ்வாலயத்தின் பால்கனியில் அமைந்துள்ள அறையில் புனித சவேரியார் தங்கியிருந்தார் என்ற வரலாற்று உண்மையும் கலந்துள்ளது.


7. இவ்வாலயத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதை கோட்டார் புனித சவேரியார் ஆலயம் வரை தொடர்பு கொண்டுள்ளது. ஒருமுறை வெளிநாட்டில் இருந்து வந்த கிறிஸ்தவ பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் உள்ளே சென்று எந்த வாயிலையும் அடையாததால் அந்த சுரங்கப் பாதையின் நுழைவாயில் இப்போது கம்பி கதவால் மூடப்பட்டுள்ளது.
8. அதே போல புதிய ஆலயமும் முன்புறம் அரண்மனை தோற்றத்தில் மர வேலைப் பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் உள் மையப்பகுதி ரோமை வாடிகன் தேவாலயம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது மையப்பகுதியில் நின்று நாம் பேசுவது, பெரிய அரங்கில் பேசுவது போன்ற உணர்வை கொடுக்கும். ஆனால் அந்த ஒலி அடுத்திருப்பவர்கு கேட்பதில்லை. 
9. இந்த திருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தில் (Thiruvithancode Periyanayagi shrine)வருடத்திற்கு இரண்டு முறை திருவிழா கொண்டாடப் படுகிறது. 
10. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மக்களும், பல்வேறு மத, இன மக்களும் இங்கு குழுமுகின்றனர். 
இவ்வாலயம் திங்கள் நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், தக்கலையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

GOOGLE MAP
Periyanayagi RC Church,
Main Road, Thiruvithamcode, Tamil Nadu 629174
https://maps.app.goo.gl/z83er

Follow us on Facebook

Read more about Kanniyakumari Tourism

950 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *